தமிழகத்தில் தமிழுக்கு கெட்-அவுட்! ஆங்கில வழியில் தான் இனி - மாணவர்களின் மனமாற்றமா? ஆங்கில திணிப்பா?!
anna university Tamil language
11 பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி சிவில் மெக்கானிக் படிப்புகள் நீக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் பதில் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
மிகக் குறைந்த அளவில் மாணவர் சேர்க்கை இருந்த காரணத்தினால் தமிழ் வழி படிப்பு நீக்கப்படுவதாக அண்ணாமலை பல்கலைக்கழகம் அந்த அறிவிப்பில் விளக்கம் அளித்துள்ளது
அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கப்படுவதாகவும், இது வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது மட்டுமில்லாமல், 6 ஆங்கில வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளும் மூடப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட கல்லூரிகளில் தமிழ் வழி படிப்புகள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பட்டுக்கோட்டை, திருக்குவளை கல்லூரிகளில் ஆங்கிலேய வழி இஇஇ, சிவில், மெக்கானிக் படிப்புகளும் நீக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ் வழியில் பொறியியல் படிப்புகளை நடத்த தமிழக அரசு வழிவகை செய்திருந்தது. ஆனால், தமிழ் வழி பொறியியல் படிப்பை தமிழக மாணவர்களே புறக்கணித்து இருப்பது, தமிழ் தங்களுக்குத் தேவையில்லை, தமிழ் வழியில் படித்தால் தங்களுக்கு மதிப்பில்லை என்று தமிழக மாணவர்கள் எண்ணுகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே சமயத்தில், ஆங்கில வழி கல்வியை அண்ணா பல்கலைக்கழகம் திணிக்கிறதோ? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
English Summary
anna university Tamil language