அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை இழுத்து விட்ட ஆர்எஸ் பாரதி! என்ன டீலிங்கா?! அது நடக்காது! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக சொத்து பட்டியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு, திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்தாவது, "எம்ஜிஆர், ஜெயலலிதா கூட ஊழல் குற்றச்சாட்டை தான் முன் வைத்தார்கள். ஆனால், அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிடுகிறார். அதிலும், யார் யார் சொத்துக்களை எல்லாம் சேர்த்து வெளியிடுகிறார். 

திமுகவிற்கு என்று 1400 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். திமுகவிற்கு தமிழக முழுவதும் 3000 கோடி ரூபாயில் பள்ளிகள் இயங்குவதாக தெரிவிக்கிறார். அந்த பள்ளிகள் எங்கே இருக்கிறது? அதற்கு உண்டான ஆவணங்கள் என்ன என்பதை இன்னும் 15 நாட்களுக்குள் அண்ணாமலை வெளியிட வேண்டும். இல்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலினுக்கு 200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கூறும் அண்ணாமலை, 2014க்கு பிறகு மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பிரதமர் மோடியும், அமித்ஷாவும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது? என்று நீங்கள் அண்ணாமலையை பார்த்து கேள்வி கேளுங்கள். இதற்கு நாங்கள் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த ஒன்பது வருடங்களாக இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீங்கள் அண்ணாமலையை தான் கேள்வி கேட்க வேண்டும்.

2016 சட்டமன்ற தேர்தலில் திருப்பூருக்கு அருகே நடு சாலையில் 576 கோடி ரூபாய் பணக்கட்டுகளுடன் கண்டெய்னர் லாரி கண்டுபிடிக்கப்பட்டது. அதையும் தேர்தல் ஆணையமே கைப்பற்றியது. அன்று முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா. இது யாருடைய பணம்? ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் இல்லை 570 கோடி ரூபாய், நடுரோட்டில் கண்டெய்னரில் கண்டெடுக்கப்பட்டது

இது தொடர்பாக திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கில் ஏழு வருடங்கள் முடிந்துவிட்டன. ஆனால் இதுவரை சிபிஐ விசாரணையை தொடங்க கூட இல்லை. இவர்கள் சிபிஐ விசாரணை கோருவது எதற்காக என்றால், அவர்கள் கையில் அது உள்ளது. அதை வைத்து பழி வாங்கலாம் என்று கணக்கு போட்டாலும், அதையும் சந்திக்க திராவிட முன்னேற்ற கழகம் தயாராக உள்ளது.

இதே சிபிஐ தானே ஆ ராஜா மீது வழக்கு போட்டது. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்று வழக்கு போட்டார்கள். அந்த வழக்கை நாங்கள் சந்தித்தோம் தானே. ராஜா மாவீரன் போல வெற்றி பெற்று வந்தார் தானே. அண்ணாமலை யாரை மிரட்டுகிறார். நாங்கள் ஒன்றும் எடப்பாடியோ! வேலுமணியோ கிடையாது மிரட்டினால் பணிவதற்கு.

அடுத்த பட்டியலை வெளியிடப் போவதாக கூறுகிறார் அண்ணாமலை. என்ன டீல் பேசிக் கொண்டிருக்கிறாரா? திமுகவிடம் டீல் பேச முடியாது. காரணம் எங்களிடம் மடியில் காணவில்லை. வழியில் பயமில்லை. யாருக்குமே பயப்பட மாட்டோம்"


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai DMK File issue RS Bharati Say about EPS


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->