திறனற்ற திமுக ஆட்சியின் அவல நிலை! பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்! - Seithipunal
Seithipunal


சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பிரியா கால்பந்து ஆட்ட வீராங்கனையான இவர் ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கடந்த நவம்பர் ஏழாம் தேதி மூட்டு வலி பிரச்சனை காரணமாக கொளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்பொழுது அவருக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் காயத்திற்கு போடப்பட்ட கட்டு இறுக்கமாக கட்டப்பட்டது. அதிக நேரம் அவ்வாறு இருந்ததால் ரத்த ஓட்டம் இல்லாமல் காலில் ரத்தக்கட்டு ஏற்பட்டது. 

இதன் காரணமாக ஆபத்தான நிலையில் கடந்த எட்டாம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரியாவுக்கு நவம்பர் 9ஆம் தேதி அறுவை சிகிச்சையின் மூலம் கால் அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரியா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அரசு மருத்துவர்கள் முறையற்ற சிகிச்சையால் பிரியாவின் உயிர் பிரிந்துள்ளது. இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் "அறுவை சிகிச்சையின் போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. 

சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

திமுக அரசு சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக 2 கோடி ரூபாய் அவரது குடும்பத்தினருக்கு உடனடியாக வழங்க வேண்டும்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai said Football player Priya family should be compensated


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->