கோவையில் நடந்தது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதியின் சதி செயல்! அடித்துச் சொல்லும் அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் இன்று அதிகாலை 4.15 மணி அளவில் மாருதி கார் வெடித்ததில் ஒருவர் பலியானார்.இந்த நிலையில் கார் வெடிப்பில் பலியானது கோவை மாவட்டம் உக்கடத்தை சேர்ந்த ஜமேசா முபின் என்பது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஜமேசா முபின் ஒரு பொறியியல் பட்டதாரி என தற்போது தெரிய வந்தது. அவர் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் ரசாயன பொருள் மற்றும் பொட்டாசியம் சல்பரை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இவர் மீது ஏற்கனவே சந்தேகத்தின் பெயரில் 2019ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தி உள்ளது.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை கார் வெடிப்பு திட்டமிட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் செயல் என குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை கூறியதாவது "கோயம்புத்தூர் சிலிண்டர் வெடிப்பு என்பது 'சிலிண்டர் வெடிப்பு' அல்ல. இது ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு கொண்ட ஒரு தெளிவான பயங்கரவாத செயல். இந்த தகவலை தமிழக அரசு 12 மணி நேரமாக மறைத்து வருகிறது. இது மாநில உளவுத்துறை மற்றும் திமுக அரசின் தெளிவான தோல்வியல்லவா?

இந்தத் தாக்குதலைத் திட்டமிட்ட குற்றவாளி இறந்ததால் வெளிநாட்டில் இருந்து செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சதி செயல் தடைபட்டுள்ளது. இன்னும் சிலர் தமிழக மண்ணில் இந்த சதி செயலில் இறங்கி உள்ளனர். எனவே தமிழக முதல்வர் தார்மீக பொறுப்பேற்று தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும்" என அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai said kovai attack was conspiracy of ISIS terrorist


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->