அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் திடீர் பணி நீக்கம்! காரணம் இதுதான்!
Annamalai university 56 assistant professors sacked
கடலூர், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அதிக அளவுக்கு அதிகமான பணியாளர்களை நியமனம் செய்ததாலும் போதுமான நிதி இல்லாததால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலை ஏற்பட்டது. இதனை கண்டித்து பல்கலைக்கழக ஊழியர்கள் பேராசிரியர்கள் ஆகியோர் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருவதால் தமிழக அரசு இந்த பல்கலைக்கழகத்தை ஏற்க முடிவு செய்தது.
அதன்படி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு ஏற்கும் வகையில் சட்ட மசோதா கடந்த 2013ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் தமிழக அரசு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை ஏற்றி நடத்தி வருவதால் நிதி நீருக்கடியை சமாளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தது.
பல்கலைக்கழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட உதவி பேராசிரியர்களின் சான்றிதழ்களை சரி பார்த்தபோது அதில் 56 பேராசிரியர்கள் தகுந்த கல்வி தகுதி மற்றும் தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் நியமனம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இருப்பினும் தகுதியற்ற பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படாமல் 38 பேர் அண்ணாமலை பல்கலைந்து பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு பணி அமர்த்தபட்டது. மீதமான 18 பேர் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்தனர்.
உதவி பேராசிரியர்கள், தமிழக அரசு உயர் கல்வித் துறை அறிவுறுத்தல் படி பணிநீக்கம் செய்ய அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, கடந்த 2011ம் ஆண்டுக்கு முன்பு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நியமனம் செய்யப்பட்ட 56 பேராசிரியர்களும் உரிய கல்வி தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்தது தெரிய வந்தது.
இதனால் ஆட்சி மன்ற குழு முடிவு படி, தமிழக அரசு உயர் கல்வித்துறை அறிவுறுத்தலம்படி அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
English Summary
Annamalai university 56 assistant professors sacked