அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு : ஆய்வுக்கட்டுரைகள் குறித்த அறிவிப்பு வெளியீடு..! - Seithipunal
Seithipunal


அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25ம் தேதிகளில் பழனியில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் முருக பக்தர்கள் பங்கேற்கலாம் என்றும், மேலும் ஆராய்ச்சி மாணவர்கள் அவர்களது ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது முத்தமிழ் முருகன் மாநாட்டில் முருக பக்தர்கள் பங்கேற்கவும், ஆராய்ச்சி மாணவர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https:/muthamizhmuruganmaanadu 2024.com/ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஆய்வு மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம் என்றும் இந்துசமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

மேலும் உலகெங்கிலும் நிலவும் முருக வழிபாடு, இலக்கியங்களில் முருக வழிபாடு, வேத மரபில் தமிழ், கல்வெட்டுக்களில் முருகவேல்,செந்தமிழ் முருகன், கள் தலைவன், சேய்த்தொண்டர் புராணம், பல்வேறு இலக்கியங்களில் முருகனடியார்கள், நாட்டார் வழக்காறுகளில் முருக வழிபாடு, வடமொழி இலக்கியங்களில் தென்தமிழ் முருகன், முருகனும் முத்தமிழும் மற்றும் முருகனடியார்கள் குறித்த முக்கியத் தகவல்கள், திருப்பணிகள் என்பன போன்ற தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டும். 

மேலும் முருகன் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கட்டுரையில் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், வாட்சப் எண் மற்றும் சமர்பிப்பவரின் புகைப்படம் கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.

மேலும் கட்டுரை குறித்த சுருக்கமான குறிப்புகள் மற்றும் முழு ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தையும் ஜூன் 20ம் தேதிக்குள் மேற்கண்ட இணைத்தளம் மூலம் அனுப்ப வேண்டும் என்றும், தேர்வு செய்யப்படும் கட்டுரை குறித்த தகவல் ஜூலை 1ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Announcement Of Research Papers For Worldwide Muthamizh Murugan Conference


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->