மயிலாடுதுறையில் இரட்டை கொலை சம்பவம்; மேலும் ஒரு சாராய வியாபாரி கைது..!
Another liquor dealer arrested in the double murder incident in Mayiladuthurai
மயிலாடுதுறை அருகே முட்டம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 02 கல்லூரி மாணவர்கள் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறை, உடனடியாக 03 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலைக்குள் மூவேந்தன், தங்கதுரை, ராஜ்குமார் ஆகிய 03 சாராய வியாபாரிகளை கைது செய்தனர்.
குறித்த, இரட்டை கொலை சம்பவம், முன் விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதா? அல்லது சாராய விற்பனையை தடுத்ததால் அரங்கேற்றப்பட்ட கொலையா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சாராய வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலை சம்பவத்தில், ஒரே குடும்பதப்தை சேர்ந்த சாராய வியாபாரிகள் தங்கதுரை, மூவேந்தன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், சாராய வியாபாரியான முனுசாமியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Another liquor dealer arrested in the double murder incident in Mayiladuthurai