சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு.! குவைத்துக்கு செல்ல வேண்டுமென அடம்பிடித்த ஆந்திர இளைஞர்.!  - Seithipunal
Seithipunal


குவைத் நாட்டின் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இளைஞர் மறுபடியும் குவைத்திற்கு செல்ல வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் அடம் பிடித்ததால் அவரை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளனர். 

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் பகுதியைச் சேர்ந்த ராமன் என்ற நபர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல சென்னை விமான நிலையத்திலிருந்து குவைத்துக்கு சென்றார். 

குவைத் விமான நிலையத்தில் அவரை பரிசோதித்த போது இளைஞரிடம் சரியான ஆவணங்கள் இல்லை என்பதை கூறி குவைத் நாட்டு விமான நிலைய அதிகாரிகள் மீண்டும் அவரை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் பரபரப்படைந்த அந்த இளைஞர் உள்நாட்டு மையத்திற்குள் சென்று தனது பழைய டிக்கெட்டை காட்டி தான் மீண்டும் குவைத் செல்ல விரும்புவதாகவும், தன்னை பிளைட்டில் அனுமதிக்குமாறும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இந்த நாள் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞரை அழைத்து கடுமையாக எச்சரித்து வெளியில் அனுப்பி வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anthra men bad behavior in chennai airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->