தீடிர் சோதனை! சார்பதிவாளர் அலுவலகத்தில் சிக்கிய ரூ.87,500! ஊழியர்களுக்கு ஆப்பு! - Seithipunal
Seithipunal


தேனியில் பெரியகுளம்​ சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.87,500 பணத்தை லஞ்சம் ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் தேன்கரை பகுதியில் இரண்டு எண் இணைய சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது.  இந்த அலுவலகத்தில் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறுவதாக தேனி மாவட்டம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசியம் தகவல் கிடைத்து உள்ளது.

அதன் அடிப்படையில் தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்  சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத ரூ. 87,500 பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.

பின்னர் அதிக அளவில்  பத்திர பதிவு நடைபெற்றுள்ளதாக ஆவணங்களை போலீசார் சரிபார்த்தனர். அலுவலகத்தில் இரண்டு ஆண்டுகளாக தாமரைக்குளம் தாசில்தார் நகரை சேர்ந்த பரமேஸ்வரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இது தொடர்பாக ஆவணங்களையும் சேகரித்தனர்.

சோதனையின் பொது அலுவலகத்தில் பத்திரபதிவுக்காக வந்திருந்த பொதுமக்கள் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். அலுவலக உதவியாளர்கள் உட்பட மூன்று பேரும் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anti bribery police seize unaccounted money of Rs 87500 from Registrar office in Theni


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->