விநாயகர் சிலையை சேத படுத்திய சமூக விரோதிகள்...கைது செய்ய கோரி மனு..!
anti-socials damaged idol Ganesha...petition for arrest
இந்து முன்னணி, திருப்பூரில் 2 கோவில்களில் விநாயகா் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழகமெங்கும் இந்துக்களின் எழுச்சித் திருவிழாவான விநாயகா் சதுா்த்தி பெருவிழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்து முன்னணி சாா்பில், இந்தாண்டு 'பிரிவினை வாதத்தை முறியடிப்போம் தேசிய சிந்தனையை வளா்ப்போம்' என்ற பெயரில், ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகா் சிலைகள் பொதுமக்களின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவில் பல்லாயிரக்கணக்கானோா் கலந்துக்கொண்டு, மாபெரும் மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாடப்பட்டது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத சமூக விரோதிகள் அங்குள்ள இரு கோவில்களில் விநாயகா் சிலைகளை சேதப்படுத்தி உள்ளனா். சிலைகளை சேதப்படுத்தியவா்களை காவல் துறையினா் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்து முன்னணி சாா்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக. சாா்பில், விநாயகா் சிலைகளை சேதப்படுத்திய நபா்களைக் கைது செய்யக் கோரி காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவா் பி.செந்தில்வேல் திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், திருப்பூரில் உள்ள விஸ்வேஸ்வர சுவாமி கோவில், சக்தி மாரியம்மன் கோவில் ஆகிய இடங்களில் விநாயகா் சிலைகளை சேதப்படுத்தியுள்ளனா். சமூக நல்லிணக்கத்துக்கு தீமை விளைவிக்கும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆகவே விநாயகா் சிலைகளை தேதப்படுத்தியவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
anti-socials damaged idol Ganesha...petition for arrest