மக்களின் கஷ்டம் உங்களுக்கு புரியாதா.? மு.க ஸ்டாலினை வறுத்தெடுத்த அறப்போர் இயக்கம்..!!
Arappor asked MKStalin about road construction in Madurai
தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட அரசாணையின்படி புதிதாக போடப்படும் சாலைகள் எந்த உயரத்திற்கு போடப்படுகிறதோ அந்த அளவிற்கு பள்ளம் தோண்டி சாலை போட வேண்டும் என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உத்தரவிட்டிருந்தது. ஏனெனில் பழைய சாலை மீது புதிய சாலை போடுவதால் சாலையின் உயரம் அதிகரித்து மேடாகவும், வீடுகள் பள்ளமாகவும் மாறுவதால் மழை நீர் உட்புகும் பிரச்சனை ஏற்படும்.
இது தொடர்பாக பல புகார் எழுந்த நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் தமிழக அரசின் அரசாணையை பின்பற்றாமல் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் போடப்படும் சாலைகளின் உயரம் தற்பொழுது அதிகரித்து வருவதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
அதன்படி மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியில் உள்ள சாதசிவம் நகர் பாரதி தாசன் சாலைக்கு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணையை பின்பற்றாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் சாலையின் உயரம் அதிகரித்து வீடுகள் பள்ளமாக மாறி உள்ளது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் "கொஞ்சம் கூட மக்கள் மீது அக்கறை இல்லாமல் தான்தோன்றித்தனமாக செயல்படும் திமுக அரசு மதுரை மக்களின் கோபத்தை சம்பாதித்து வருகிறது.
சாலை ஒப்பந்தம் எடுப்பவர்கள் நலனிற்காக அவர்கள் விருப்பப்படி சாலை அமைக்க விட்டுவிட்டு, வேடிக்கை பார்ப்பதற்கு தான் ஆட்சிக்கு வந்தீர்களா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? ஒவ்வொரு மழையின் போதும் பள்ளத்தில் தள்ளப்படும் வீடுகளில் வசிப்பவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? அவர்கள் இரவு முழுவதும் தூங்காமல் இருந்து, வீட்டு உள்ளே வரும் நீரை வெளியேற்றும் கொடுமை உங்களுக்கு புரியுமா?.இந்த உயரமான சாலைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு என்ன தான் பதில் சொல்ல போகிறீர்கள்?" என முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளனர்.
English Summary
Arappor asked MKStalin about road construction in Madurai