விபத்துகளை ஏற்படுத்தும் ஆபத்தான சென்னை சாலைகள் - அதிரவைக்கும் ரிப்போர்ட்!  - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் அறப்போர் இயக்கம் நடத்திய ஆய்வில், ஆபத்தான வேகத்தடைகள், சாக்கடை மூடிகள், மழை நீர் வடிகால் குழிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக தன்னார்வலர்கள் 100 பேர் கொண்டு, அறப்போர் இயக்கம் சார்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இதில், மொத்தம் 201 இடங்களில் ஆபத்தான வேகத்தடைகள் இருப்பதும், 205 இடங்களில் விபத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு சாக்கடைக்குழி மூடிகள் அமைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. 

பொதுவாக வேகத்தடையின் உயரம் பத்து சென்டிமீட்டர் உயரம், 12 அடி அகலம் என்று இருக்க வேண்டும். ஆனால், இதனை மீறி சென்னையில் 201 இடங்களில் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வேகத்தடை அமைக்கப்பட்டது.

மேலும், இந்த வேகத்தடைக்கு 40 மீட்டர் முன்பாக எந்த அறிவிப்பு பலகையும் நிறுவப்படவில்லை என்றும், வேகத்தடையில் வெள்ளை நிற கோடு போடப்படவில்லை என்றும், இதனால் இந்த வேகத் தடைகள் ஆபத்தானதாக இருப்பதாகவும் அறப்போர் இயக்கத்தின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 

இதேபோல், சாக்கடை குழி மூடிகள், மழை நீர் வடிகால் மூடிகள் சாலையின் அளவைவிட இறக்கமாக குழி போல் இருப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. 

மேலும் சென்னையில் 61 இடங்களில் சாக்கடை கால்வாய்கள் ஆபத்தானதாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arappor Iyakkam Chennai road speed breaker 


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->