நாங்களே வெளியிடுகிறோம் - தமிழக அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த அறப்போர் இயக்கம்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெடுஞ்சாலை உணவக பட்டியலை அறப்போர் இயக்கம் வெளியிட்டு உள்ளது.

அறப்போர் இயக்கம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திமுக அரசு வெளியிட தயங்கிய அங்கீகரிக்கப்பட்ட நெடுஞ்சாலை உணவக பட்டியலை அறப்போர் வெளியிடுகிறது.

இந்த பட்டியல் வெளியிடப்பட்டால் அங்கீகாரம் இல்லாத நெடுஞ்சாலை உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்த முடியாது என்பதால், அங்கே பேருந்தை நிறுத்த வாங்கப்படும் பணத்தை கணக்கு காட்டாமல் அமுக்க முடியாது என்பதால், இந்த வருடம் முதல் முறையாக E Tender மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகங்களின் அதிகாரபூர்வ பட்டியல் இது வரை இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. 

2 வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட அரைகுறை பட்டியல் தான் அரசின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. ஆகையால் அங்கீகரிக்கப்பட்ட உணவக பட்டியலை அறப்போர் இயக்கம் RTI மூலம் பெற்று இங்கே மக்களுக்காக வெளியிடுகிறது. 

இந்த பட்டியலில் இடம்பெறாத உணவகங்களில் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டால் அங்கே பயணிகளுக்கு ஏற்படும் எந்த ஒரு அசம்பாவிதத்திற்கும் அரசு பொறுப்பு ஏற்காது. அங்கே நிறுத்தும் சமயத்தில் உங்கள் உடமைகள் பேருந்தில் இருந்து திருடு போனால் போக்குவரத்து துறை காவல்துறையில் புகார் கொடுக்க கூட முன் வரமாட்டார்கள். 

ஆகையால் நீங்கள் அரசு பேருந்தில் பயணம் செய்யும் போது அங்கீகரிக்கப்படாத உணவகங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டால் உடனடியாக 149 எண்ணை அழைத்து புகார் தெரிவியுங்கள்" என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arappor Iyakkam Release Govt Approved Motel List


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->