உச்சகட்ட பரபரப்பு.. போலீசார் - வழக்கறிஞர் இடையே வாக்குவாதம்.. பதற்றமான வாக்கு எண்ணும் மையம்.!! - Seithipunal
Seithipunal


தென்காசி சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நாடார் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளர் செல்வமோகன் தாஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தபால் வாக்குகள் மீண்டும் எண்ண வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் தபால் வாக்குகள் இன்று காலை 10 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தபால் வாக்கு எண்ணும் மையம் அருகே போலீசார் வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தபால் வாக்குகள் எண்ணும் மையம் அருகே அமைந்துள்ள நீதிமன்றத்திற்கு வருகை தந்த வழக்கறிஞர்களை போலீசார் சோதனை செய்ததால் ஆத்திரம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றி காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

argument between lawyers and police at tenkasi polling center


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->