#அரியலூர் || சிறுமியை கடத்தி முத்தம் கொடுத்த குற்றவாளிக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை.! - Seithipunal
Seithipunal


அரியலூரில் இருசக்கர வாகனத்தில் 8 வயது சிறுமியை கடத்தி சென்று முத்தம் கொடுத்த வாலிபருக்கு, 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரியலூர் சடையப்பர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச்சென்று முத்தம் கொடுத்துள்ளார். 

இது குறித்த புகாரின்பேரில் போலீசார் மாரிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று இந்த வழக்கில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாலியல் துன்புறுத்தல் ஈடுபட்ட குற்றவாளி மாரிமுத்துக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்ற நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார்.

20 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ariyalour marimuththu pocso case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->