அரியலூர் | பட்டாசு ஆலை விபத்துக்கான காரணம்? விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
Ariyalur explosion firecracker factory information
அரியலூர், திருமானூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு ஆலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தின் காரணமாக 4 பெண்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீயணைப்பு துறை வீரர்கள், போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் ஒன்றிணைந்து அவர்களின் உடல் பாகங்களை ஒன்று சேர்த்து அடையாளம் கண்டனர்.
இதனைத் தொடர்ந்து காயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் 4பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆலையின் உரிமையாளர் மற்றும் அவரது மருமகன் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த சில மாதங்களாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புதிதாக அதே ஊரைச் சேர்ந்த 3 பெண்கள் வேலைக்கு சேர்ந்துள்ளனர். வேகமாக வேலை நடந்து வந்த நிலையில் புதிதாக வேலையில் சேர்ந்த பெண்களுக்கு அங்கு எப்படி வேலை செய்ய வேண்டும் என தெரியாமல் அமோனியா பாஸ்பேட் இருந்த பெட்டியை வேகமாக இழுத்துள்ளனர்.
இதனால் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இந்த தகவலை அங்கு வேலை செய்த லேசான காயங்களுடன் உயிர்த்தப்பியம் சிவகாசியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதுகாப்பு முறை இல்லாமல் வெடி மருந்துகளை குவித்து வைத்திருந்ததும் இந்த பயங்கர வெடி விபத்திற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
English Summary
Ariyalur explosion firecracker factory information