விஜய்யின் நீட் தேர்வு குறித்த கருத்து... உண்மை இதுதான் - அா்ஜுன் சம்பத் பகீர் பேட்டி.!
Arjun Sampath interview
கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலையில் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி சூரசம்ஹாரா மாநாடு நடைபெற உள்ளதால் அதற்கான அழைப்பிதழ் வெளியீடு நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வந்திருந்தார்.
இன்று அர்ஜுன் சம்பத், மாநில செயலாளர் டி. குருமூர்த்தி உள்ளிட்டோர் சூரணம் ஹார மாநாட்டிற்கான அழைப்பிதழை வெளியிட்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அர்ஜுன் சம்பத்,
சுவாமி மலைக்கு சொந்தமான அய்யனார் கோவில் இடத்தை பாபநாசம் எம்.எல்.ஏ பெயரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக இந்து சமய அறநிலைய துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாபநாசம் கோயிலுக்கு அருகே அஸ்திவாரம் தோண்டும்போது திருமேனிகள் கிடைத்துள்ள இடத்தை கையகப்படுத்தி அதே வளாகத்தில் திருமேனிகளை வைத்து வழிபட வேண்டும். மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஒருபுறம் பயிற்சி அளிப்பதும் மறுபுறம் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் வழக்கறிஞர்களை வைத்து போராடவும் ஸ்டாலின் தூண்டுகிறார்.
மற்றொரு கமலஹாசனாக நடிகர் விஜய் ஜோசப் மாறி வருகிறார். அடுத்த படம் ரிலீஸ் செய்வதற்காக தி.மு.க சார்பாக நீட் தேர்வுக்கு எதிராக பேசுகிறார். நீட் தேர்வு குறித்து நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவிப்பது சுய லாபத்திற்காக தான்.
தமிழகத்தில் அதிக மாணவர்கள் நீட் தேர்வில் தேர்வு பெறுகின்றனர். தி.மு.க ஆட்சியில் தான் விஜயகாந்த் மண்டபம் இடிக்கப்பட்டதை மறக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.