ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : இயக்குனர் நெல்சனிடம் போலீஸ் விசாரணை? - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம்  வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக 27 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  திருவேங்கடம் காவல்துறையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

மேலும் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான சம்போ செந்தில் மற்றும் அவரது கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்பட்ட சூழலில் மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்தார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் காவல்துறையினர் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர், மோனிஷா நெல்சன் தனது வக்கீல் மூலம் விளக்கம் அளித்திருந்தார். இதையடுத்து இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடம் தனிப்படை காவல்துறையினர் இன்று விசாரணை செய்து வருவதாக செய்தி வெளியானது.

இந்நிலையில்,, ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தம்மிடம் போலீஸ் விசாரணை நடத்தியதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும், தம்மிடம் போலீஸ் விசாரணை நடத்தியதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Armstrong murder case Director Nelson police investigation


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->