திருச்சியில் அதிர்ச்சி - ராணுவ வீரரின் செல்போனில் சிக்கிய ஆபாச படம் - நடந்தது என்ன?
army man arrested for take obscene vedio
திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாலாஜி. குஜராத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வரும் இவருடைய மனைவி சென்னையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் ராணுவ வீரர் ஜெயபாலஜி பெண்களை ஆபாசமாக வீடியோ எடுப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் படி, போலீசார் இராணுவ வீரரின் செல்ஃபோனை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைப்பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ராணுவ வீரர் ஜெயபாலாஜி மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்தனர்.
மேலும், போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கில் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
army man arrested for take obscene vedio