இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த ராணுவ வீரர் உயிரிழப்பு.!
Army soldier killed after falling from twowheeler
இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி தனலட்சுமி இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான்.
முரளி ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தார்.
இதையடுத்து சோளிங்கரில் உள்ள மாமியார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் இருசக்கர வாகனம் வேகத்தடையில் ஏறி இறங்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த முரளியை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Army soldier killed after falling from twowheeler