செயற்கை கருத்தரிப்பு மையங்கள் - சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு..!
Artificial insemination centers entry fees order in health department
மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, செயற்கை கருத்தரிப்பு மையங்களை கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மையம், கருதரிப்பு மையங்கள், வாடகை தாய் மையம் என நான்கு வகை மருத்துவ மையங்களாக பிரித்து அதற்கான பதிவு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50 ஆயிரம் ரூபாயும், கருப்பையில் செலுத்தும் மையத்திற்கு 50 ஆயிரம் ரூபாயும், வாடகை தாய் மையத்திற்கு இரண்டு லட்சம் ரூபாயும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த பதிவு கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தலாம் என்றும், இதன் மூலம் போலி கருதரிப்பு மையங்களை செயல்படாமல் தடுக்க முடியும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
English Summary
Artificial insemination centers entry fees order in health department