அரசு கலை கல்லூரிகளில் 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்.. வகுப்புகள் எப்போது தொடக்கம்.? - Seithipunal
Seithipunal


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல் பொது கலந்தாய்வு கலந்தாய்வு நேற்றுடன் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து 2ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு வகையான பாடப் பிரிவுகளில் இருக்கும் 1,07,299 இடங்களில் சேர்வதற்கு கடந்த மாதம் 8ம் தேதி முதல் 22ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதில், சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு மே 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 3,363 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 2 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிவித்திருந்த நிலையில், முதல்கட்ட கலந்தாய்வு கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் 2ம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் ஜூன் 22ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க உள்ளது  குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arts and science college 2nd phase councelling from today


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->