அருகம்பாக்கம் வங்கி கொள்ளை : தனிப்படை அமைத்து விசாரணை.! - Seithipunal
Seithipunal


சென்னை அரும்பாக்கத்தில் உள்ள 'பெடரல் வங்கி' கிளையில்  தங்க நகைக்கடன் பெறும் பிரிவில் லாக்கரில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக வங்கி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த கொள்ளை சம்பவம் நடந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், வங்கியின் காவலாளியை விசாரித்தபோது, அந்த வங்கியில் பணியாற்றி வந்த முருகன் என்ற ஊழியர் தனக்கு குளிர்பானம் ஒன்றை குடிக்க கொடுத்ததாகவும், அதனை குடித்த பின்தான் மயங்கி விட்டதாகவும் பிறகு என்னை கட்டி போட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நான்கு தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arukampakkam bank robbery case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->