தேர்தல் முன்விரோதம்., திமுக பிரமுகரை சம்பவம் செய்த அதிமுக பிரமுகர் தலைமறைவு.!
arumanai dmk murder case
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே உள்ள மலைக்கோடு பகுதியைச் சேர்ந்த தாஸ் என்ற தி.மு.க., பிரமுகருக்கும். அதே பகுதியை சேர்ந்த ஸ்டான்லி என்ற அ.தி.மு.க. பிரமுகருக்குமிடையே கடந்த உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததுள்ளது.
இந்த நிலையில், சம்பவம் நடந்த நேற்று இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த ஸ்டான்லி, தாசை பிடித்து கீழே தள்ளியுள்ளார். இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த தாஸ்-யை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று தாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், ஸ்டான்லி மீது கொலை வழக்கு பதிவு செய்து இரண்டு தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள ஸ்டாலினை தேடி வருகின்றனர்.