கவுன்சிலர் கணவரிடமே லஞ்சம் கேட்டதால் பரபரப்பு!!! ஓட்டம் பிடித்த பிரேக் இன்ஸ்பெக்டர்.... - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்ப் போக்குவரத்து பிரேக் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில், சுரேஷ் பாக்கியம் என்பவர்ப் புதிய கார்ப் பதிவு எண் பெற வள்ளியூர்ப் பிரேக் இன்ஸ்பெக்டர்ப் பெருமாள் என்பவரை அணுகினர். அப்போது வள்ளியூர் இன்ஸ்பெக்டர்ப் பெருமாள் ரூ. 20,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதைக்கேட்ட சுரேஷ் பாக்கியம் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனென்றால் வள்ளியூர் டவுன் பஞ்சாயத்து , 3வது வார்டு தி.மு.க கவுன்சிலர்ச் சுதாவின் கணவர்தான் இந்தச் சுரேஷ் பாக்கியம்.

இன்ஸ்பெக்டருக்குத் தகுந்த பாடம்:

கவுன்சிலரின் கணவரிடமே கறாராக லஞ்சம் கேட்கிறாரே என்று நினைத்த சுரேஷ் பாக்கியம் இன்ஸ்பெக்டருக்குத் தகுந்த பாடம் ஒன்றைக் கற்பிக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். இதற்காக ரூ.10,000 பணத்தை google pay-யில் பிரேக் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பினார். பின்பு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார்ச் செய்து அவரைக் கையும் களவுமாக மாட்டிவிட்டுள்ளார். விரைந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரைக் கண்டதும் காம்பவுண்ட் சுவர்த் தாவி குதித்து,'பிரேக் பிடிக்காமல்' ஓட்டம் எடுத்துள்ளார்ப் பிரேக் இன்ஸ்பெக்டர்ப் பெருமாள். இந்நிகழ்வு தொடர்ந்து சில நாட்களுக்கு மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். இதற்கிடையே ஒரு புரோக்கரிடம் பேசிய பிரேக் இன்ஸ்பெக்டர்ப் பெருமாளின் ஆடியோக்கள் வெளியானது.

பிரேக் இன்ஸ்பெக்டர்ப் கூறியது:

அதில் அவர்க் கூறியதாவது, " இங்கதான் ரேட் கம்மி, ரூ.20,000 தான் வாங்குறேன். அதுவும் நீ சொல்றனு தான். இதையே திருநெல்வேலி இன்ஸ்பெக்டரிடம் போய் கேட்டுப்பார். ரூ.50,000 கேட்பார். ஆனால் என்னைப் போல அதிகம் பேச மாட்டார். 40 லட்சம் ரூபாய் செலவு செய்து கார் வாங்குவாராம். ஒரு 20,000 ரூபாய் தர மாட்டானா... இவன் புகார்ப் பண்ணா என் மேல ஒரு வழக்கு தானே வரும்; பாத்துக்குறேன்." என அந்த ஆடியோவில் பேசியிருந்தது வெளிவந்துள்ளது. இந்த ஆடியோக்கள், அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வால் திருநெல்வேலி அலுவலகத்தில் எந்நேரம் வேண்டுமானாலும் ட்ரெயிர் நடக்கலாம் என்ற பதற்றம் நிலவியது.

வெறிச்சோடி இருந்த அலுவலகம்:

அதற்குப் பின்னர் அலுவலகத்தில் இருந்து ஒரு இன்ஸ்பெக்டரும் நேற்று பணிக்கு வராததால் புதிய வாகனப் பதிவுகள்,லைசென்ஸ், பெயர் மாற்றம், என நூற்றுக்கும் மேற்பட்ட திட்டமிடப்பட்ட பணிகள் அப்படியே இருந்தன. அலுவலகம் வந்த பலரும் காத்திருந்து சென்றனர். நேற்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகமே வெறிச்சோடி இருந்தது. பிரேக் இன்ஸ்பெக்டர்ப் பெருமாள் கூறியது போல எப்போதும் லஞ்சப்புழக்கத்தில் இருக்கும் திருநெல்வேலி அலுவலகம் நேற்று பரபரப்பின்றிக் காணப்பட்டது. விசாரித்தபோது நேற்று பணியில் இருக்க வேண்டிய இன்ஸ்பெக்டர்க் கோர்ட் பணிக்காக வெளியூர்ச் சென்றதாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ask for bribe to Councilor husband causing a stir Brake inspector caught running away


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->