சிதம்பரம் கோவிலில் அட்டூழியம்!...பட்டாச்சாரியர்கள் - தீட்சிதர்கள் இடையே பரபரப்பு!
Atrocity in chidambaram temple commotion between bhattacharyas and dikshitars
கடலூர் மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில், தில்லை கோவிந்தராஜ பெருமாள் சுவாமி கோவிலும் அமைந்துள்ளது. இந்த நிலையில், நடராஜருக்கு மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் தரிசன திருவிழா நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, பக்தர்கள் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரமோற்சவம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் உள்ள கொடிமரம் பல ஆண்டுகளாக வெயில், மழையால் சேதமடைந்து இருப்பதால், புதிய கொடிமரம் வைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாக அறங்காவலர் மற்றும் பட்டாச்சாரியார்கள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
அதன்படி, நேற்று கொடி மரத்திற்கு படையல் செய்து வழிபட்ட நிலையில், இது குறித்து தகவல் அறிந்த நடராஜர் கோவில் தீட்சிதர்கள், தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவம் நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி, கொடி மரத்தை புதுப்பிக்கவோ, மாற்றவோ கூடாது என்று கோவில் நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில், சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் கோவிலுக்கு விரைந்து பட்டாச்சாரியர்கள் மற்றும் தீட்சிதர்களிடையேயான பேச்சுவார்த்தையை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் நடராஜர் கோவில் வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
Atrocity in chidambaram temple commotion between bhattacharyas and dikshitars