#திண்டுக்கல் || 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுனர் போக்சோவில் கைது.!
Auto driver arrested for sexually harassing girl in Dindigul
திண்டுக்கல் மாவட்டத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுனரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சுரேஷ்(23). இவர் லிங்கவாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை செய்து வந்துள்ளார்.
சிறுமி இது பற்றி தாயிடம் கூறியதையடுத்து, நத்தம் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த நத்தம் காவல் துறையினர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுனர் சுரேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Auto driver arrested for sexually harassing girl in Dindigul