குடும்பப் பிரச்சனை காரணமாக ஆட்டோ ஓட்டுனர் தூக்குப்போட்டு தற்கொலை.!
Auto driver suicide due to family problem
சென்னையில் குடும்ப பிரச்சினை காரணமாக ஆட்டோ ஓட்டுனர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை கோயம்பேடு குமரன் நகரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சிவா(42). இவரது மனைவி ஜோதி. இவர்கள் இருவருக்கும் நேற்று குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஜோதி, கணவருடன் ஏற்பட்ட தகராறில் அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சிவா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கோயம்பேடு காவல்துறையினர் சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Auto driver suicide due to family problem