#ராணிப்பேட்டை || தேர்தலைப் புறக்கணித்த அவளூர் கிராம மக்கள்.. காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவ இன்று நடைபெற்று வருகிறது. அதன் படி தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 3:00 மணி வரை 51.4 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 

அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 57.86 சதவீத வாக்குகளும் குறைந்தபட்சம் மத்திய சென்னையில் 41.47 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. இது ஒரு புறம் இருக்க தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து உள்ளனர். அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அவளூர் கிராம மக்கள் மக்களவைப் பொதுத் தேர்தலை புறக்கணித்துள்ளனர். 

இது தொடர்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் "ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் காவேரிப்பாககம் ஒன்றியம் அவளூர் கிராமம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே மேம்பாலம் அமைத்து தர வேண்டி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தோம். 

எங்கள் கோரிக்கையை செவி சாய்க்காத பட்சத்தில் அவளூர் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி நடைபெறவிருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலில் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்" என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி கிராம மக்களும் இன்று வீதிகளில் கருப்பு கடி கட்டி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Avalur village people boycott lok sabha election in Ranipet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->