ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதை தவிருங்கள்.. ஒட்டன்சத்திர வர்த்தகர்கள் நலச்சங்கம் தீர்மானம்!
Avoid shopping online. Ottanchathiram Traders Welfare Association Resolution
ஒட்டன்சத்திரத்தில் நகர ஒருங்கிணைந்த வர்த்தகர்கள் நலச்சங்கம் 23-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நகர ஒருங்கிணைந்த வர்த்தகர்கள் நலச்சங்கம் தலைவர் பி.கே.சுப்பிரமணியன் தலைமையில் 23 - ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஒட்டன்சத்திரம் நகர் மன்ற தலைவர் க.திருமலைசாமி, கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கிவைத்தார்.
மேலும் இதனைத் தொடர்ந்து வர்த்தகர்கள் அணி சங்க நிர்வாகிகள் பலர் சங்கத்தின் விதிமுறைகளை குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.மேலும் ஒட்டன்சத்திரத்தில் ஜீவநதியாக நங்காஞ்சிஆறு விளங்கி வருகிறது இதனால் விவசாயிகள், கால்நடைகள், பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வரும் இந்த நங்கஞ்சி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதால் வாழ்வாதாரமாக விளங்கும் நங்கஞ்சி ஆறு தற்போது கழிவுநீர் நதியாக மாறிவிட்டது எனவே நங்கஞ்சி ஆற்றினை தூய்மைப்படுத்த அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனு கொடுக்க வேண்டும் எனவும் நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது,பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத படி,கடைகள் முன்பு சாலை ஆக்கிரமிப்பு செய்யாமல் வியாபாரம் செய்ய வேண்டும் எனவும், பொதுமக்கள்ஆன்லைனில் பொருட்கள் வணிகம் செய்வதை தவிர்த்து ஒட்டன்சத்திரம் பகுதிவால் பொதுமக்கள் கடை வியாபாரிகளிடம் நேரில் சென்று பொருட்கள் வாங்க பொதுமக்களை அறிவுறுத்த வேண்டுமெனவும் பல்வேறு தீர்மானங்கள் தீர்மானிக்கப்பட்டது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் செயல் தலைவர் வஞ்சிமுத்து,செயலாளர் தணிகாசலம்,பொருளாளர் முகமது மீரான்,செய்தி தொடர்பாளர் பழனி குமார், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கௌரவத் தலைவர்,கௌரவ ஆலோசகர்,இணைச் செயலாளர்கள்,ஒருங்கிணைப்பாளர்கள்,செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
English Summary
Avoid shopping online. Ottanchathiram Traders Welfare Association Resolution