உலக ஆட்டிசம் நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி : மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் துவக்கி வைத்தார்!
Awareness rally on World Autism Day District Collector M. Pratap inaugurated
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உலக ஆட்டிசம் நாள் முன்னிட்டு ஆட்டிசம் குறைபாடுள்ள நபர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் துவக்கி வைத்து பேசினார்.
உலக ஆட்டிசம் தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 2 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இத்தினத்தில் ஆட்டிசம் குறைபாடு உள்ள நபர்களை ஏற்றுக் கொள்வது மற்றும் ஆதரவு அளிப்பது இந்நிகழ்வின் நோக்கமாகும் ஆகையால் தான் ஊக்குவிக்கும் வகையில் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்தார்.
முன்னதாக ஆட்டிசம் குறைபாடுள்ள மாணவர்களின் இசைக் கச்சேரியினை பார்வையிட்டு . ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுடன் கேக்குகள் வெட்டி அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஊட்டி விட்டார்..இந்நிகழ்வின் ஏற்பாடுகளை ஹோப் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்டின் நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான வி. நாகராணி செய்தார்.
English Summary
Awareness rally on World Autism Day District Collector M. Pratap inaugurated