பிற்படுத்தப்பட்டோர் தொழில் தொடங்க நிதிஉதவி - மாவட்ட ஆட்சியர் விடுத்த அறிவிப்பு!
backward people start business Chengalpattu District Collector
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் இன்று விடுத்துள்ள அறிவிப்பில், "பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும் மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், மேற்கண்ட இன மக்களில் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து, தலா ரூ.3 லட்சம் வீதம் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்த அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் 10 நபர்களை கொண்ட குழுவாக இருத்தல் வேண்டும். தையல் தொழில் உறுப்பினர்கள் முன் அனுபவமுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்களாகவும், குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவர்களாகவும், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவுக்கும், விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
பயன்பெற விரும்புவோர் குழுவாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
English Summary
backward people start business Chengalpattu District Collector