நீதிபதி குறித்து அவதூறாக பேசிய பத்ரி சேஷாத்ரி கைது!
Badri Seshatri arrested for defaming the judge
மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த கலவரத்தின் போது பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் “மணிப்பூர் கலவரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு சிறிது கால அவகாசம் தருவோம்.
அப்போதும் நடவடிக்கை எடுக்கத் தவறினால் உச்சநீதிமன்றம் இவ்விவகாரத்தைக் கையில் எடுக்க நேரிடும். மணிப்பூர் கலவரத்தில் 2 பெண்கள் ஆடைகளை களைந்து இழுத்துச் செல்லப்படும் வீடியோக்கள் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் நடந்த இந்த கொடூரம் ஏற்றுக்கொள்ள முடியாது" என கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து யூடியூப் சேனல் ஒன்றியத்திற்கு கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி பேட்டி அளித்திருந்தார். அதில் "மணிப்பூரில் கொலை நடக்கத்தான் செய்யும். தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம்" என சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.
இது குறித்து வழக்கறிஞர் ஒருவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் பத்ரி சேஷாத்ரியை சென்னையில் கைது செய்து குற்றவியல் தடுப்புச் சட்டம் 153, 153A, 505 (1) (b) ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
English Summary
Badri Seshatri arrested for defaming the judge