ஐ.டி அதிகாரிகளை தாக்கிய திமுகவினரின் ஜாமின் மனு தள்ளுபடி.!
bail dismissed of dmk parties attack income tax officer case
ஐ.டி அதிகாரிகளை தாக்கிய திமுகவினரின் ஜாமின் மனு தள்ளுபடி.!
கடந்த மே மாதம் 26 ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்யவும் என்றனர் அப்போது 100க்கும் மேற்பட்ட திமுகவினர் வருமானவரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து அவர்களை தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் நான்கு அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர் அவர்கள் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். இந்த தாக்குதல் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர் அதன் பேரில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மூன்று தி.மு.க கவுன்சிலர்கள் உட்பட 18 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்கள் அவர்கள் மீது பல்வேறு விதமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதை யடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11 திமுகவினர் சார்பாக ஜாமீன் வழங்க கோரி கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு கரூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்க வந்தது. அப்போது, "கடந்த மே மாதம் கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய நபர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அவர்களை தாக்கிய திமுக உறுப்பினர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
bail dismissed of dmk parties attack income tax officer case