பேரிஜம் ஏரியைக் காண சுற்றுலா பயணிகளுக்குத் தடை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


பேரிஜம் ஏரியைக் காண சுற்றுலா பயணிகளுக்குத் தடை - காரணம் என்ன?

பொதுவாக வார விடுமுறை என்பதால் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அப்படி வரும் சுற்றுலா பயணிகள் இங்கு நிலவும் இதமான சூழலை அனுபவிப்பதுடன் பல்வேறு சுற்றுலா அமைவிடங்களுக்கும் செல்கின்றனர். 

மலை மீது அமைந்துள்ள பேரிஜம் ஏரியின் அழகினையும் கண்டு ரசித்து செல்வார்கள். ஆனால், இந்த பேரிஜம் ஏரி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏனென்றால் இந்தப் பகுதியில் சிறுத்தை, புலி, யானை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் இந்த ஏரிக்கு செல்ல வேண்டும் என்றால் வனத்துறையினரின் அனுமதி பெற்றே செல்ல முடியும். இந்த நிலையில், வார விடுமுறை தினமான இன்று கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரி பகுதிக்குச் செல்ல ஏராளமான சுற்றுலா பயணிகள் அனுமதி பெற காத்திருந்தனர். 

ஆனால், பேரிஜம் ஏரி பகுதியில் தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதற்குத் தடை விதித்திருப்பதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் ஏரியை காணவந்த சுற்றுலா பயணிகள் ஏரியைக் காணமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ban on touristers visit in barijam lake


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->