வங்கி ஊழியர்களுக்கு குட் நியூஸ்: என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal



பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் வேலை, ஊதிய உயர்வு, காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பொது துறை வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த ஊதிய உயர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் தேதியிட்டு அமல்படுத்தப்படும். இந்த ஒப்பந்தம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தால் வங்கிகளுக்கு ரூ. 7898 கோடி கூடுதலாக செலவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bank employees increase salary


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->