அ.தி.மு.க. மற்றும் த.வெ.க. கூட்டணியா..? நத்தம் விஸ்வநாதன் அதிரடி பதில்..!
AIADMK and TVK alliance Natham Viswanathan sharp response
த.வெ.க தலைவர் விஜய் பற்றி கருத்து சொல்வதற்கு செய்திகள் இல்லை என்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:- தமிழக வெற்றிக் கழகம் இதுவரை களத்தில் இறங்கி வரவில்லை, கருத்து கூற ஒன்றுமில்லை. விஜய் இன்னும் அவருடைய செல்வாக்கை நிரூபிக்கவில்லை. செல்வாக்கை நிரூபிக்காமல் எதுவும் சொல்ல முடியாது. அவரைப் பற்றி கருத்து சொல்வதற்கு செய்திகள் இல்லை. தேர்தலை இருந்தால் கருத்து கூறலாம் என்று கூறியுள்ளார்.
![](https://img.seithipunal.com/media/TVK-v83k7.jpg)
அத்துடன், விஜய் வெற்றி பெறலாம், வெற்றி பெறாமலும் போகலாம். அவரைப் பற்றி கருத்து சொல்வதற்கு அபிப்பிராயம் இல்லை. தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமையலாம், அமையாமலும் போகலாம். கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்ய முடியும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில்,தி.மு.க.வும், ஊழலும் கூட பிறந்தது. தி.மு.க. என்றாலே ஊழல் என்று அர்த்தம். இரண்டையும் தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாது. தி.மு.க. அரசிற்கு எதிராகத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். இன்று கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்ட கதிதான் நாளை தி.மு.க.வுக்கும் ஏற்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
English Summary
AIADMK and TVK alliance Natham Viswanathan sharp response