மாணவிகளுக்கு மாதம் ₹.1000 திட்டம்.. வைரலாகும் வங்கி குறுஞ்செய்தி புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


அரசு பள்ளிகளில் +2 வரை படித்துவிட்டு கல்லூரிகளில் உயர்கல்வியில் சேருகின்ற மாணவிகளுக்கு மாதம் ₹.1000 வழங்கும் திட்டம், இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

இந்த திட்டத்தின்கீழ் 93,000 மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் பலன் பெற இருப்பதாக கூறப்படுகிறது. திட்டத்தின் துவக்க விழா, இன்று வட சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இத்திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி அளிக்கப்படும்.

2022-23 பட்ஜெட் கூட்டத்தொடரில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், தமிழக அரசால், 698 கோடி ரூபாய் செலவில், இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தற்போது இந்த திட்டத்தின் கீழ் மாணவி ஒருவருக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்திருப்பதாக மாணவி மற்றும் அவரது குறுஞ்செய்தி அடங்கிய செல்போனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்த தகவல்கள் உறுதிபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bank sms photo for college girls fund


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->