பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு லாரி - கைவரிசையைக் காட்டிய போதை ஆசாமிகள்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வையாயூரில் செயல்பட்டு வரும் தனியார் பீர் உற்பத்தி ஆலையிலிருந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சேமிப்பு கிடங்கிற்கு நேற்று மாலை கனரக லாரி ஒன்று பீர் பாட்டில்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. 

இதையடுத்து இந்த லாரி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே உள்ள பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஆம்னி பேருந்து ஒன்று லாரியை முந்தி செல்ல முயன்றது. அந்த நேரத்தில் லாரி ஓட்டுநர் பேருந்து மீது மோதாமல் இருக்க லாரியை இடதுப் பக்கம் திருப்பியுள்ளார். 

இதில், லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பீர் பாட்டில்கள் அனைத்தும் பள்ளத்தில் சரிந்து விழுந்தன. இதைப்பார்த்த அப்பகுதி போதை ஆசாமிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பீர் பாட்டில்களை மூட்டை மூட்டையாக அள்ளிச் சென்றனர். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மதுராந்தகம் காவல்துறையினர் பீர் பாட்டில்களை எடுத்துச் சென்றவர்களிடமிருந்து அதனை கைப்பற்றி, பீர் பாட்டில்களை யாரும் எடுக்காதபடி பாதுகாத்தனர். இருப்பினும் சிலர் தங்களது சட்டை, லுங்கி என்று அனைத்திலும் பீர் பாட்டில்களை எடுத்துச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் மதுபான ஆலையிலிருந்து ஊழியர்களை வரவழைத்து வேறொரு லாரியில் மதுபானங்களை எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

beer botles truck accident in near madhuranthagam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->