தமிழகத்தில் களைகட்டும் பீர் விற்பனை - இந்த மாதம் மட்டும் எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயில் காலம் என்றாலே டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் பீரைத் தான் தேர்வு செய்வார்கள். அதனால், டாஸ்மாக் நிர்வாகமும் பல்வேறு புது வகையான பீர்களையும் அறிமுகம் செய்துள்ளது.

இந்த நிலையில், கோடை காலத்தை முன்னிட்டு தமிழகத்தில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, கடந்த மே மாதம் 1-ந்தேதி முதல் தற்போது வரை, மதுபானக் கடைகளில் 25 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான பீர் பெட்டிகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, கடந்த ஆண்டு மே மாத விற்பனையை காட்டிலும் 30 சதவீதம் அதிகம் என்று மதுபான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, மதுபான அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:- "தமிழகத்தில் கோடைகாலத்தையொட்டி 24 பீர் பிராண்டுகள் விற்பனை நடைபெற்றது. இதில், 3 புது வகையான பீர் பிராண்டுகளும் விற்பனை செய்யப்பட்டன. அதில், 100 சதவீதம் கோதுமை பீா் அடங்கும். இது மாநிலம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

மேலும், புதிய வகை பீர் பிராண்டுகளை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. விற்பனையை பொறுத்தவரையில், மே மாதத்தில் மட்டும் இதுவரை 25 லட்சத்து 50 ஆயிரம் வரையில் பீர் பெட்டிகள் விற்பனை நடந்துள்ளது. இது, கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் அதிகம். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 20 லட்சம் வரை பீர் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டது. 

ஆனால், தற்போது அதைவிட 30 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. அதேபோல், வெளிநாட்டு வகை மதுபான விற்பனையும் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளது. அதேபோல், டாஸ்மாக் வருவாய் மே மாதத்தில் அதிகரித்துள்ளது" என்று அவர்கள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

beer sales increase in tamilnadu for summar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->