இன்று போகிப் பண்டிகை.. வீட்டை சுத்தம் செய்து.. காப்புக் கட்டுவது ஏன்? - Seithipunal
Seithipunal


போகிப்பண்டிகையில் காப்பு கட்டுவது எதற்காக?

போகிப்பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் பெயர் போக்கிப் பண்டிகை என்பதாகும். இது பின்னர் மருவி போகிப்பண்டிகை என்றாகி விட்டது.

பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகுப்படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப்பொலிவுடன் காணப்படும். வீட்டின் வாசலில் மாக்கோலமிட்டு வாசலில் மாவிலை கட்டி பூஜைகள் செய்து இறைவனை வழிபடுவர்.

அதுமட்டுமில்லாது, வீடுகளிலும் அரிசிக்கோலம், பெயிண்டுகளால் கோலமிட்டு அழகுப்படுத்துவது தமிழர் பண்பாடு.

போகி நன்னாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் என்பது வழக்கம். இந்திரனுக்கு போகி என்று வேறு பெயர் உள்ளது. பழங்காலத்தில் இந்திர விழா நடைபெற்றபோது பழைய குப்பைகளை தீமூட்டி வைப்பார்கள்.

போகிப்பண்டிகை காப்பு கட்டும் நாளாக கொண்டாடப்படுகிறது. மாவிலை, வேப்பிலை, பூலாப்பூ, ஆவாரம்பூ இவற்றை வீட்டிலும், கோவிலிலும் கட்டி வைப்பது தான் காப்பு கட்டுதல். இதனால் தீயவைகள் நெருங்காது என்பது ஐதீகம்.

பண்டிகை காலங்களில் வீட்டில் உள்ளவர்களை நோய் அண்டாமல் இருக்க வேண்டும் என எண்ணி, காப்பு கட்டுதல் எனும் பெயரில் ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. அது தற்போது போகி என கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் மழையால் ஏற்படும் மூட்டைப்பூச்சிகளின் தொல்லையின் காரணமாகவும், விஷப்பூச்சிகளின் தாக்குதலில் இருந்து விடுபடவும், வீட்டின் முகப்புகளிலும் காப்பு கட்டி தோரணங்களாக தொங்கவிடுவார்கள்.

தை மாத அறுவடையின்போது புது தானியங்கள் வந்தவுடன் பழைய தானியங்களை வெளியே எடுத்துவிட்டு பூலாப்பூ, ஆவாரம்பூ, வேப்பிலை, மஞ்சள் போன்றவற்றை தரையில் பரப்பி அதன்மேல் தானியங்களைக் கொட்டி வைப்பார்கள். இதன்மூலம், புதிய தானியங்கள் கெட்டுப் போகாமல் இருக்க காப்பு கட்டு உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bhogi kappu kattu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->