தவெக கட்சியில் இணைகிறாரா பிக்பாஸ் பிரபலம்? - Seithipunal
Seithipunal


ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. சின்னத்திரை சீரியல்களிளும் நடித்துள்ள இவர், சமீபத்தில் நடந்து முடிந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதையடுத்து 21ஆம் நாளில் எவிக்ட் செய்யப்பட்டார். 

இந்த நிலையில் தர்ஷா குப்தா தூத்துக்குடி அருகே அய்யனடைப்பு பகுதியில் உள்ள பிரத்யங்கிரா தேவி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தூத்துக்குடியில் உள்ள பிரத்யங்கரா கோயிலுக்கு வந்து பொங்கலிட்டு, பிரத்யங்கரா தேவி சிறப்பு பூஜையில் கலந்து கொண்டேன். 

பிக் பாஸ் போறதுக்கு முன்னாடியே நிறைய ஆன்மிக பயணம் செய்திருக்கேன். இப்போ மறுபடியும் போறேன். இந்த கோயிலில் தரிசனம் செய்தால், நினைத்த காரியம் நடக்கும் என்று சொல்வார்கள். அதனால் தான் இந்த யாகத்தில் கலந்து கொண்டேன்.

விஜய் டிவியில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நான், மேலும் அடுத்த லெவலுக்கு போக வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். தற்போது தமிழில் நடிப்பதற்கு கதைகள் கேட்டுக்கொண்டு வருகிறேன். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நல்ல கதையில் நடிக்க தான் விருப்பம். பீட்சா படம் முதல் நான் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகை. அதனால் அவரை பார்த்ததே எனக்கு மகிழ்ச்சி.

தளபதி விஜய் அடுத்த முதலமைச்சர் ஆவாருன்னு எதிர்பார்ப்போட காத்திட்டு இருக்கேன். என்னயை கட்சியில் சேருமாறு கூப்பிட்டால் கண்டிப்பாக நான் கட்சியில் சேர்ந்து பணியாற்றுவேன். பதிவி கிடைத்தால் நல்லது தான்” என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bigg boss celebrity dharsha kupta speech about joined tvk


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->