இனி தப்பிக்கவே முடியாது.. காவல்நிலையங்களில் பயோ மெட்ரிக் முறையில் வருகை பதிவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கான பணி பதிவேடு பராமரிப்பு, பதவி உயர்வு, சம்பளம், விருப்ப ஓய்வு, பணி நீக்கம் உள்ளிட்ட விவகாரங்களை, அமைச்சு பணியாளர்கள் கவனித்து வருகின்றனர்.

பொதுவாக காவல் நிலையங்களுக்கு, போலீசார் காலை 7:00 மணிக்கு பணிக்கு வர வேண்டும். அப்போது அவர்களுக்கு, 'ரோல்கால்' நடத்தி பணிபுரிய வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். இதேபோல், அமைச்சு பணியாளர்கள் காலை 9:30 மணிக்கு பணிக்கு வருவர்.

ஆனால், போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருவது இல்லை. வருகை பதிவேடுகளில் விடுமுறை எடுப்பதை குறிப்பிடுவது இல்லை. இருப்புனும் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சென்றதாக கணக்கு காட்டி விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், மாநிலம் முழுதும் செயல்படும் காவல் நிலையங்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் அலுவலகங்களில், வருகை பதிவை கண்காணிக்கும் வகையில், 'பயோ மெட்ரிக்' கருவிகள் பொருத்த போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், 'வருகை பதிவேடு குளறுபடியை ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக, பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்துவது தொடர்பாக, டி.ஜி.பி., அலுவலகம் வாயிலாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது' என்றுத் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

biometric attandance start all police station in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->