கடலூரில் பத்து ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி - பொதுமக்கள் கூட்டத்தால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கடலூரில் பத்து ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி - பொதுமக்கள் கூட்டத்தால் பரபரப்பு.!

நாட்டில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்கிற வதந்தி இன்னும் மக்களிடையே பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதனால் மக்கள் நாணயத்தை வாங்குவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். 

இந்த வதந்தியை மக்களிடம் இருந்து நீக்குவதற்கு, அரசு விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுத்து நடத்தினாலும் 10 ரூபாய் நாணயங்கள் கடலூர் மாவட்டத்தில் இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. 

இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் ராமநத்தம் அடுத்துள்ள புதுக்குளத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் மக்களிடையே 10 ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நேற்று புதிதாக திறந்த பிரியாணி கடையில் 10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்தார். 

இதுகுறித்து தகவலறிந்த, அந்த பகுதி மக்கள் வீட்டில் கிடந்த 10 ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொண்டு பிரியாணி கடையை நோக்கி படையெடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தினர். 

பின்னர் இது தொடர்பாக கடை உரிமையாளர் ரமேஷ் தெரிவித்ததாவது, "நான் சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் பணிபுரிந்தேன். அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்து புதிதாக பிரியாணி கடையை திறந்தேன். 

தற்போது 10 ரூபாய் நாணயம் ஒரு சில கடைகளில் வாங்க மறுத்துவருவதால், அதுபற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன். அதன்படி, கடை திறந்து முதல்நாளில், 10 ரூபாய் நாணயத்துக்கு பிரியாணி வழங்கினேன். மக்களும் ஆர்வமுடன் வந்து பிரியாணியை வாங்கி சென்றனர்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

biriyani sale ten rupees coin in cuddalore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->