பிறப்பு, இறப்பு சான்றிதழ் : விருப்பம் இருந்தால் ஆதார் எண் கொடுங்கள்.! வெளியான அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பிறப்பு மற்றும் இறப்புகளைப் பதிவு செய்து சான்றிதழ்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 

பிறப்பு பதிவின்போது மருத்துவமனைச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் விவரங்கள் தொடர்பான தகவல்களை மட்டும் அளித்தால் போதும். 

இதனை போன்றே இறப்பு பதிவின்போது இறப்பு மற்றும் சான்றிதழ் உள்ளிட்ட தகவல்களை மட்டுமே அளித்தால் போதும். 

இந்த நிலையில், தமிழகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவின் செய்யும் போது ஆதார் தகவல்களை தன்னார்வ முறையில் சேகரிக்க சுகாதாரத் துறை உத்தவிட்டுள்ளது. 

இதன்படி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பதிவு செய்யும் போது ஆதார் தகவல் கேட்கப்படும். 

அப்போது விருப்பப்பட்டால் ஆதார் தொடர்பான தகவலை அளிக்கலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

birth and death certificate aadhar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->