மீறினால் கைது நடவடிக்கை! அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த காவல்துறை!
BJP Annamalai Anna University Tn Police DMK
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையை கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால் உண்மைகளை மறைக்க திமுக அரசு முயற்சிக்கிறது என கூறி, பா.ஜ.க. மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் உமாபாரதி தலைமையில் மதுரையில் இருந்து சென்னை வரை நீதிப்பேரணி நடத்தப்படவுள்ளதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்த சூழலில், மதுரை மாநகர காவல்துறை பா.ஜ.க.வின் நீதி பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது. மேலும், அனுமதியின்றி பேரணி நடத்தினால் கைது செய்யப்படும் என எச்சரிக்கையையும் காவல்துறை விடுத்துள்ளது.
ஏற்கனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அதிமுக, பாஜ.க., நாம் தமிழர், பாமக ஆகிய கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதும், அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
BJP Annamalai Anna University Tn Police DMK