திமுகவோடு 'ஒன்றிய' நடிகர் விஜய்! சமயம் பார்த்து போட்டு தாக்கிய அண்ணாமலை! அதிரும் தமிழக அரசியல் களம்! - Seithipunal
Seithipunal


நீட் முறைகேடு மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

மேலும் இன்று நீட் தேர்வை ரத்து செய்ய கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவர் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இரண்டாம் கட்ட கல்வி விருது விழாவில் உரையாற்றிய நடிகர் விஜய், நீட் தேர்வு மாநில கல்விக்கு எதிரானது என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் மற்றும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசியிருந்தார். 

மேலும், மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என்று அழைப்பதை திமுகவின் அஜெண்டாவாக பார்க்கப்படும் நிலையில், நடிகர் விஜய்யும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்.

இந்தநிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நீட் விவகாரத்தில் திமுகவிற்கு மட்டுமில்லாமல், நடிகர் விஜய்க்கும் சேர்த்து தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், ஒரு பதிவு ஒன்றை தனது X சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவரின் அந்த பதிவில்,நீட் விலக்கு என்று நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதன் ஒரு பகுதியாக, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, திரு AK ராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள குளறுபடிகளை, தமிழ்நாடு பாஜக பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. 

நீட் தேர்வு வந்த பிறகு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, மத்திய பாஜக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், தீர்வு காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால், நீட் தேர்வு வருவதற்கு முன்பு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விவரங்களை, பலமுறை வலியுறுத்தியும், திமுக அரசு அமைத்த இந்தக் குழு வழங்க மறுப்பது ஏன்? முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன?

நீட் தேர்வுக்கு முன்பாக, எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்வி இடம் பெற்றனர் என்ற உண்மையைக் கூறினால், நீட் தேர்வு வந்த பிறகே, அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டு, திமுக உருவாக்கிய போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா?"  என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்ணாமலை திமுகவிற்கு எதிராக இந்த பதிவை வெளியிட்டு இருந்தாலும், தற்போது நடிகர் விஜயும் நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதால், அவருக்கும் சேர்த்து தான் பதிலடியாக அண்ணாமலை கொடுத்துள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai Condemn to DMK and also TVK Vijay NEET issue


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->