அதிமுக கதை முடிகிறதா? அண்ணாமலை சொன்ன அந்த வார்த்தை! அதிரடி பேட்டி! - Seithipunal
Seithipunal


அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அணையப்போகும் விளக்கு என்பதனால் தான் பிரகாசமாக எரிவதாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

காரைக்குடி, செட்டிநாடு பகுதிக்கு வந்திருந்த அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவிக்கையில், "தமிழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தின் போது அமித்ஷா திருமயம் பைரவர் கோவிலுக்கு வருகை தருவதாக இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரால் செல்ல முடியவில்லை. அவரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

தேர்தல் பரப்புரை முடிவதற்குள் அந்த கோவிலுக்கு அமித்ஷா வருவதாக உத்தரவாதம் அளித்ததன் படி, தேர்தல் பரப்புரையின் கடைசி நாளான இன்று அவர் பைரவர் கோவிலில் தரிசனம் மேற்கொண்டுள்ளார்.

கன்னியாகுமரியில் 1892 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி முதல் 2 நாட்கள் வரை சுவாமி விவேகானந்தர் கடும் தவம் புரிந்ததன் காரணமாகவே இந்தியாவின் வளர்ச்சியை அவர் உணர்ந்ததாக சொல்லப்படுவதுண்டு.

விவேகானந்தர் தவம் புரிந்த அந்த பாறையில் அமைந்துள்ள மண்டபத்தை பராமரித்து வரும் தனியார் அமைப்பு அழைப்பின் பெயரிலேயே பிரதமர் நரேந்திர மோடி அங்கு =தியானம் மேற்கொள்ள உள்ளார். அதனால் அங்கு பாஜகவினர் யாரும் நாங்கள் செல்லவில்லை. 

மக்கள் மன்றத்தில் இந்துத்துவா குறித்து விவாதம் நடப்பது மகிழ்ச்சி தான். அதன் உண்மையான விளக்கம் அப்போதுதான் வெளிவரும். இந்துத்துவா யாருக்கும் எதிரி கிடையாது. 

வருகின்ற ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு அதிமுக எங்கே இருக்கப் போகிறது என்பதை பார்க்கத்தான் போகிறோம். யார் எத்தனை இடங்களில் வெற்றி பெறுகிறார்கள் என்பதையும் பார்க்க தான் போகிறோம். 

எந்த கட்சி மக்கள் மனதை பிடித்திருக்கிறது. எந்த கட்சியின் வளர்ச்சி மிக அதிகமாக உள்ளது என்பதையும் பார்க்க தான் போகிறோம். அணைகின்ற விளக்கு பிரகாசமாக எரியும். அதே போல் தான் அதிமுகவின் தற்போதைய நிலையும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai Say About Election 2024 Result and ADMK


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->