தமிழக அரசின் factcheck-யையே கிராஸ் செக் செய்த அண்ணாமலை! இன்னும் பதில் வரல... அதான் ஹைலைட்டே! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் பள்ளிக்கூடங்கள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டுகளை தமிழக அரசின் factcheck பொய் என்று பதிலளித்து ஒரு பதிவை வெளியிட்டு இருந்தது.

அதில், "பள்ளிக் கல்வி : மீண்டும் பொய் சொல்லும் அண்ணாமலை ! 

பொய் 1: “கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2,497 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டதாகவும், இந்த ஆண்டு ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிலையில், மானியக் கோரிக்கையில் அன்பழகனார் என்ற பெயரே இல்லை” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

உண்மை: 2025 - 26 நிதிநிலை அறிக்கை மீதான மானியக் கோரிக்கை இன்னும் தொடங்கப்படவே இல்லை. 

2024 – 25 பள்ளிக்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையில், அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் 2022 - 23 மற்றும் 2023 - 24 ஆம் ஆண்டுகளில் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1,887.75 கோடியும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ரூ.316 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிலும் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொய் 2: “கடந்த 2023 – 2024 ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு ரூபாய் கூடச் செலவு செய்யவில்லை என்பது மானியக் கோரிக்கையில் தெளிவாகிறது.” என அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

உண்மை: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.429.67 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், 1 ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்று பொய் பரப்பியுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இதனை முற்றிலும் மறுத்துள்ள அண்ணாமலை, தகுந்த ஆதாரத்துடன் மீண்டும் ஒரு பதில் ஒன்றால் வெளியிட்டுள்ளார். அதில், "திமுக அரசை, அமைச்சர்களை நோக்கி, பாஜக கேள்வி எழுப்பும்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் ஓடி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் tn_factcheck ஊழியர். ஒவ்வொரு முறையும் அவருக்கும் சேர்த்து விளக்கமளிப்பதும், அவர் பின்னால், திமுக அரசும், அமைச்சர்களும் மறைந்து கொள்வதும் வாடிக்கையாகியிருக்கிறது. 

தமிழகம் முழுவதும் பள்ளிக் கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் இருப்பதும், பல பள்ளிகளில், மேற்கூரைகள் இடிந்து விழுவதும், வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடப்பதும் நாள்தோறும் செய்திகளாக வெளிவருகின்றன. நிலைமை இப்படி இருக்க, பல ஆயிரம் கோடி செலவில் பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கட்டியுள்ளோம் என்று அமைச்சர்கள் சட்டசபையிலேயே கூறுகிறார்கள். அப்படி எங்குதான் பள்ளிகள் கட்டியுள்ளீர்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிடக் கேட்டோம். இம்முறையும் tn_factcheck  ஊழியர் ஓடி வந்திருக்கிறார்.

2025 - 26 ஆண்டுக்கான மானியக் கோரிக்கை இன்னும் தொடங்கப்படவே இல்லை என்றால், இந்த https://financedept.tn.gov.in/en/my-documents/2020/07/DemandBook_43-1.pdf  இணைப்பில் இருப்பது என்ன? 

அறிவிக்கப்பட்ட எல்லா திட்டங்களுக்கும், அவற்றின் பெயரைக் குறிப்பிட்டு, மானியக் கோரிக்கை அட்டவணையில் நிதி ஒதுக்கீடு இடம்பெறுவது வழக்கம். 2022 - 23, 2023 - 24 ஆண்டுகளில் ரூ. 1,887.75 கோடி செலவு செய்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், 2023 - 24 ஆண்டில், மூலதன உட்கட்டமைப்புக்குச் செலவிடப்பட்ட நிதி ரூ.352 கோடி மட்டுமே. எந்தத் திட்டத்தின் கீழ், ரூ. 1,887.75 கோடி செலவிடப்பட்டது?

நபார்டு வங்கியிடமிருந்து பெற்ற, ஊரகக் கட்டமைப்பு வளர்ச்சி நிதி மூலம் சில பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவே தவிர, நீங்கள் கூறும் செலவினங்கள், மானியக் கோரிக்கையுடன் சற்றும் ஒத்துப் போகவில்லையே ஏன்? 

கடந்த 2023 - 24 ஆம் ஆண்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்ததும், அதில் ஒரு ரூபாய் கூட செலவிடப்படாததும், திமுக அரசு வெளியிட்ட மானியக் கோரிக்கையிலேயே இருக்கிறது. ஆனால் நீங்கள் செலவு செய்ததாகக் கூறும் ரூ. 429.67 கோடி, எந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு வைக்கப்பட்டுள்ளது?

உங்களிடம் நிதி ஒதுக்கீடு, செலவீனங்கள் குறித்த சரியான தரவுகள் இருந்தால், எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று வெள்ளை அறிக்கை வெளியிடுவதில் எதற்கு இத்தனை தயக்கம்? எதற்காக மீண்டும் மீண்டும் பொய்களைச் சொல்லி சமாளிக்க முயற்சி செய்ய வேண்டும்? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Annamalai TN Fact Check DMK Govt MK Stalin


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->