வினாத்தாள் கசிவு - 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து.!!
11th exam cancelled in assam for leak question paper
அசாம் மாநிலத்தில் வினாத்தாள் கசிவு காரணமாக 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6ம் தேதி முதல் அசாம் மாநிலத்தில் 11 ம் வகுப்பு தேர்வு ஆரம்பமானது. இந்தத் தேர்வு மார்ச் மாதம் 29 ம் தேதி அன்று முடிவடைய இருந்தது. இந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் கணித பாடத்தின் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்தது.
இதனையடுத்து, மார்ச் 24- 29 ஆம் தேதி வரை நடைபெற இருந்த அனைத்து 11 ஆம் வகுப்பு தேர்வுகளையும் ரத்து செய்வதாக அசாம் மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ரனோஜ் பெகு அறிவித்தார்.
இதற்கு முன்னதாக அசாம் மாநிலத்தின் பார்பெட்டா மாவட்டத்தில் மார்ச் 20 தேதி அன்று நடைபெறவிருந்த 9 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வின் வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்தால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
11th exam cancelled in assam for leak question paper